பானஜி,
கோவா மாநில காவல்துறை டிஜிபி நந்தா மாரடைப்பால் நேற்று இரவு மரணம் அடைந்தார். பணி நிமித்தமாக டெல்லி சென்றிருந்த போது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரணாப் நந்தா, 1988-ஆம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவு போலீஸ் அதிகாரி ஆவார். அருணாச்சல பிரதேசம், மிசோரம் மற்றும் பிற யூனியன் பிரதேசங்களிலும் பணியாற்றியுள்ளார்.
இந்த ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி கோவாவுக்கு உள்துறை அமைச்சகத்தால் மாற்றப்பட்டார். பிரணாப் நந்தாவின் மனைவி சுந்தரி நந்தா புதுச்சேரியின் முதல் பெண் டிஜிபியாக 2018-ல் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது