தேசிய செய்திகள்

லக்னோ விமான நிலையத்தில் ரூ.36.6 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள் குப்பைத் தொட்டியில் கண்டெடுப்பு

சட்டவிரோதமாக தங்க கட்டிகளை கடத்தி வந்தவர்கள், அவற்றை குப்பைத் தொட்டியில் வீசியிருக்கக் கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினத்தந்தி

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சவுத்ரி சரண் சிங் விமான நிலையத்தில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் தங்க கட்டிகள் கிடப்பதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று சோதனையிட்ட அதிகாரிகள், குப்பைத் தொட்டியில் இருந்து 6 தங்க கட்டிகளை கைப்பற்றினர்.

அந்த தங்க கட்டிகளின் மதிப்பு சுமார் 36 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தங்க கட்டிகளை சட்டவிரோதமாக கடத்தி வந்தவர்கள் தான் அவற்றை குப்பைத் தொட்டியில் வீசியிருக்கக் கூடும் என்று தெரிவித்த அதிகாரிகள், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்