தேசிய செய்திகள்

கொரோனா நோயாளியை கற்பழித்த அரசு மருத்துவமனை டாக்டர்

உத்தர பிரதேசத்தில் கொரோனா சிகிச்சை பெற்ற நோயாளியை அரசு மருத்துவமனை டாக்டர் கற்பழித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

தினத்தந்தி

அலிகார்,

உத்தர பிரதேசத்தின் அலிகார் நகரில் தீன்தயாள் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்த நிலையில், இந்த மருத்துவமனையில் அதற்கென தனி வார்டு அமைக்கப்பட்டது.

இதில், கொரோனா பாதித்த நபர்கள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபோன்று வந்த பெண் ஒருவரை டாக்டர் கற்பழித்து உள்ளார். இதுபற்றிய புகார் போலீசில் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு டாக்டர் மீது 376 2(இ) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. போலீசார் டாக்டரை கைது செய்தனர். முதல் மந்திரி அலுவலகம் இந்த வழக்கை விசாரிக்க குழு ஒன்றை உருவாக்கி உள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை