தேசிய செய்திகள்

மணிப்பூரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வாகனம் மீது வெடிகுண்டு வீச்சு; வீரர் பலி

மணிப்பூரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வாகனம் மீது நடந்த கையெறி வெடிகுண்டு வீச்சில் வீரர் ஒருவர் பலியானார்.

தினத்தந்தி

இம்பால்,

மணிப்பூரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரின் வாகனம் ஒன்று காங்போக்பி மாவட்டத்தில் இருந்து வீரர்கள் கொண்ட சிறிய குழுவுடன் புறப்பட்டு தங்களது முகாமுக்கு சென்று கொண்டு இருந்தது.

இந்த நிலையில், இம்பால் நகரில் நாகம்பால் பகுதியில் மாலை 6.30 மணியளவில் வாகனம் வந்தபொழுது சந்தேகத்திற்குரிய வகையிலான தீவிரவாதிகள் சிலர் கையெறி வெடிகுண்டு ஒன்றை வீசியுள்ளனர். இந்த சம்பவத்தில் உமேஷ் என்ற வீரர் பலியானார். ராம் ரஞ்சன் என்ற மற்றொரு வீரர் காயமடைந்து உள்ளார்.

முதல் மந்திரி பைரன் சிங் நிகழ்ச்சி ஒன்றிற்கு நேற்று செல்வதற்கு சில மணிநேரத்திற்கு முன் காங்போக்பி மாவட்டத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று வெடிக்க செய்யப்பட்டது. இந்நிலையில் அங்கு இன்று 2வது முறையாக வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து