தேசிய செய்திகள்

உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியுடன் சுகாதார மந்திரி சந்திப்பு

கொரோனாவுக்கு எதிராக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒரே தடுப்பூசி கோவேக்சின் ஆகும். பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த இந்த தடுப்பூசியை பல நாடுகள் இன்னும் அங்கீகரிக்கவில்லை. மேலும் உலக சுகாதார நிறுவனமும் இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை.

தினத்தந்தி

தடுப்பூசியின் அவசர பயன்பாட்டுக்கான அங்கீகாரம் பெறுவதற்காக அனைத்து ஆவணங்களும் உலக சுகாதார அமைப்பிடம் வழங்கியிருப்பதாகவும், இது தொடர்பான விசாரணையையும் அந்த அமைப்பு நடத்தியதாகவும் மத்திய அரசு கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் தெரிவித்து இருந்தது.இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதனை மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று சந்தித்து பேசினார். அப்போது கோவேக்சினுக்கு அங்கீகாரம் அளிப்பது தொடர்பான விவகாரங்களை இருவரும் விவாதித்தனர்.

இது குறித்து மாண்டவியா தனது டுவிட்டர் தளத்தில், உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியுடன் ஒரு சந்திப்பு நடந்தது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் பெறுவது தொடர்பாக நாங்கள் விரிவான ஆலோசனை நடத்தினோம். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளை இந்த சந்திப்பின்போது சவுமியா சுவாமியாதன் பாராட்டினார் என்று குறிப்பிட்டு இருந்தார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து