தேசிய செய்திகள்

மராத்தா சமூக இட ஒதுக்கீடு விவகாரம்: விரைவில் பிரதமரை சந்திக்கப் போவதாக உத்தவ் தாக்கரே பேட்டி

மராத்தா சமூகத்தினருக்கு மராட்டிய அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டது.

தினத்தந்தி

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் மராத்தா சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட 16 சதவீத இடஒதுக்கீடு செல்லாது என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக இன்று மராட்டிய கவர்னர் பகத் சிங் கோஷ்யாரியை முதல் மந்திரி உத்தவ் தாக்கரே மற்றும் மூத்த மந்திரிகள் சந்தித்துப் பேசினர்.

ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய உத்தவ் தாக்கரே, இடஒதுக்கீடு ரத்து தொடர்பாக விரைவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளேன்என்றார்.

முன்னதாக, மராத்தா பிரிவினர்மராட்டிய மாநிலத்தில் மராத்தா பிரிவினருக்கு, 16 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில், சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய பிரிவினருக்கான இடஒதுக்கீட்டு சட்டம், 2018-ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது.

இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், கடந்த 1992-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை நாங்கள் மீண்டும் உறுதி செய்கிறோம். அதனை மறுபரிசீலனை செய்வதற்கான வாய்ப்பே இல்லை.

அதன்படி மராத்தா பிரிவினருக்கு மராட்டிய அரசு வழங்கிய இட ஒதுக்கீட்டை ரத்து செய்கிறோம். அதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. அதே போல அதற்கு எதிரான அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து