கோப்பு படம் 
தேசிய செய்திகள்

கேரளாவில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் நாளை தொடங்குகிறது

கேரளாவில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் நாளை தொடங்குகிறது.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

கேரள கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கேரளாவில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. தொடர்ந்து ஏப்ரல் 29-ந்தேதி வரை தேர்வுகள் நடைபெறுகிறது. எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு எழுத மொத்தம் 4 லட்சத்து 26 ஆயிரத்து 967 பேர் பதிவு செய்து உள்ளனர்.

கடந்த ஆண்டை விட 5080 பேர் கூடுதலாக தேர்வு எழுதுகிறார்கள். இந்த தேர்வானது 2962 மையங்களில் நடக்கிறது. அனைத்து தேர்வுகளும் காலை 9.45 மணி முதல் நடைபெறும். வளைகுடா நாடுகளில் 9 மையங்களில் 574 பேர் தேர்வு எழுதுகிறார்கள்.

அதேபோல், லட்சத்தீவில் 9 மையங்களில் 882 பேர் எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு எழுதுகிறார்கள். இதில், 2 லட்சத்து 18 ஆயிரத்து 903 பேர் ஆண்கள், 2 லட்சத்து 8 ஆயிரத்து 64 பேர் பெண்கள் ஆவர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை