ஸ்ரீநகர்,
பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதி முப்தி வாகாஸ். இவன் கடந்த ஆண்டு, காஷ்மீருக்குள் ஊடுருவினான். பாகிஸ்தானின் ஜெய்ஷ்இமுகமது இயக்கத்தின் காஷ்மீர் பகுதி தளபதியாக செயல்பட்டான். கடந்த மாதம் 10ந் தேதி ஜம்முவில் சுஞ்சுவான் ராணுவ முகாமிலும், கடந்த டிசம்பர் 30ந் தேதி லெத்போராவில் உள்ள சி.ஆர்.பி.எப். முகாமிலும் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டான்.
அதனால், அவனை மாநில போலீசார் கண்காணித்து வந்தனர். உளவு தகவலின் அடிப்படையில், அவந்திப்பூரில் உள்ள ஒரு வீட்டை மாநில போலீஸ் கமாண்டோக்களும், ராணுவத்தினரும் முற்றுகையிட்டனர்.
வீட்டுக்குள் புகுந்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில், வீட்டில் பதுங்கி இருந்த பயங்கரவாதி முப்தி வாகாஸ் கொல்லப்பட்டான். அவனது மரணம், ஜெய்ஷ்இமுகமது இயக்கத்துக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.