தேசிய செய்திகள்

ஆக்சிஜன் சிலிண்டர்களை ரெயில்களில் கொண்டு வர அனுமதி அளிக்குமாறு மத்திய அரசுக்கு மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி கோரிக்கை

ரெயில்களில் ஆக்சிஜன் சிலிண்டர்களை கொண்டு வர அனுமதி அளிக்குமாறு மத்திய அரசுக்கு மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி கோரிக்கை விடுத்துள்ளார்.

தினத்தந்தி

மும்பை,

ரெயில்களில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் கொண்டு வர அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு மராட்டிய அரசு கோரிக்கை விடுத்து உள்ளது. மராட்டியத்தில் 2-வது கொரோனா அலை அசுர வேகத்தில் பரவி வருகிறது. ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கி உள்ளது.

இதன் காரணமாக ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அரசு வெளிமாநிலங்களில் இருந்து ஆக்சிஜனை வாங்கி வருகிறது. இந்த நிலையில் சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே மராட்டியத்துக்கு ரெயில்களில் ஆக்சிஜன் கொண்டு வர அனுமதிக்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

போக்குவரத்து செலவை குறைக்கும் என்பதால் ரெயில்களில் திரவ ஆக்சிஜனை கொண்டுவர அனுமதிக்குமாறு மத்திய அரசை மராட்டிய அரசு கேட்டு கொண்டு உள்ளது. இது குறித்து மத்திய அரசு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்