தேசிய செய்திகள்

மராட்டிய மாநிலம்: தனியார் நிறுவனங்களில் பணி நேரம் அதிகரிப்பு

தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த நடைமுறை ஏற்கெனவே அமலில் உள்ளது.

தினத்தந்தி

மும்பை,

மராட்டிய மாநிலத்தில், தனியார் நிறுவனங்களில் வேலை நேரம் 9 மணி நேரத்தில் இருந்து 10 மணி நேரமாக உயர்த்தப்பட உள்ளது. இது தொடர்பான சட்ட விதிகளில் திருத்தம் செய்வதற்கு அந்த மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதலீடுகளை ஈர்க்கவும், வேலைவாய்புபகளை உருவாக்கவும், தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக மராட்டிய அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, உத்தர பிரதேசம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் இந்த நடைமுறை ஏற்கெனவே அமலில் உள்ளது. இந்த சட்ட திருத்தம் மூலம், 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் கடைகள் மற்றும் நிறுவனங்களின் தினசரி பணி நேரம் 10 மணி நேரமாகவும், தொழிற்சாலைகளின் பணி நேரம் 12 மணி நேரமாக உயர்த்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து