தேசிய செய்திகள்

பிரதமர் மோடியை முகமது பின் துக்ளக்குடன் ஒப்பிட்டு பேசிய மம்தா

பிரதமர் மோடியை, முகமது பின் துக்ளக்குடன் ஒப்பிட்டு மம்தா பானர்ஜி பேசினார்.

தினத்தந்தி

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தின் பர்பா மேதினிபூர் மாவட்டத்துக்கு உட்பட்ட நிம்டூரியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கட்சி தலைவரும், முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பிரதமர் மோடியை கடுமையாக தாக்கி பேசினார்.

அவர் கூறுகையில், நான் பல பிரதமர்களை பார்த்திருக்கிறேன். ஆனால் மோடியை போல கொடூரமான பேச்சு மற்றும் செயலில் ஈடுபடும் ஒரு பிரதமரை இதுவரை பார்த்ததில்லை. இவரை பார்க்கவே மக்கள் அஞ்சுகிறார்கள். அனைத்தையும் தனக்கு ஏற்றவாறு திரிப்பதுடன், யாரிடமும் ஆலோசனை கேட்காமல் தனது விருப்பப்படியே செயல்படுகிறார். முகமது பின் துக்ளக்கை போல... என்று தெரிவித்தார்.

நல்ல நாட்களை உருவாக்குவேன் என்று கூறிய மோடியின் ஆட்சியில் 12 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக குற்றம் சாட்டிய மம்தா பானர்ஜி, மக்களின் வேலைவாய்ப்புகள் பறிபோய் விட்டதாகவும், பணமதிப்பு நீக்கத்தால் பெரிய குழப்பம் நேர்ந்ததாகவும் கூறினார். கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றதை தவிர, மோடி எதையும் செய்யவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை