லக்னோ
உத்தரபிரதேசசம் ஹார்டோய் மாவட்டம் பாண்டேதாரா கிராமத்தைச் சேர்ந்த சர்வேஷ்குமார் . காய்கறி வியாபாரி இவரது 17 வயது மகள் அதே கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார். இதுகுறித்து அறிந்த சர்வேஷ்குமார் மகளை எச்சரித்து உள்ளார்.ஆனால் அவர் கேட்க வில்லை இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் தனது மகள் காதலருடன் தனிமையில் இருப்பதை பார்த்து ஆத்திரமடைந்த சர்வேஷ்குமார்
வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து மகளை கொலை செய்ததோடு, தலையை துண்டித்து, கையோடு எடுத்துக் கொண்டு காவல் நிலையம் நடந்து சென்றுள்ளார்.
துண்டிக்கப்பட்ட தலையுடன் பட்டப்பகலில் அவர் நடந்து செல்வதை கண்டு அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி கைது செய்தனர்.