தேசிய செய்திகள்

சைபுதின் சோஸ் எழுதிய சர்ச்சைக்குரிய புத்தகத்தின் வெளியீட்டு விழாவை புறக்கணிக்க மன்மோகன் சிங் முடிவு

சைபுதின் சோஸ் எழுதிய சர்ச்சைக்குரிய புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் மன்மோகன்சிங் பங்கேற்க மாட்டார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. #ManmohanSingh

தினத்தந்தி

புதுடெல்லி,

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சைபுதின் சோஸ், தனது புதிய புத்தகத்தில் காஷ்மீரிகளின் முதன்மை விருப்பம் சுதந்திரமே என்று கூறியது, காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சைபுதின் சோஸ் தனது புத்தகத்தில், காஷ்மீரிகளுக்கு சுதந்திரமே முதன்மை விருப்பம். முஷாரப்பும் இதே கருத்தை கூறினார். முஷரப்பின், கணிப்பு இன்று கூட சரியானதே என்று தெரிவித்துள்ளார். சைபுதின் சோஸ், ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஆவார். சைபுதின் சோஸ் கருத்துக்கு காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

சைபுதின் சோஸ் எழுதிய புத்தக வெளியிட்டு விழா டெல்லியில் நடைபெறுகிறது. இந்த விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்வதாக இருந்தது.

இந்த நிலையில், மன்மோகன்சிங், புத்தக வெளியிட்டு விழாவில் கலந்து கொள்ளும் முடிவில் இருந்து பின்வாங்கியிருப்பதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசியலில், தேசியவாதத்தை முன்வைத்து பெரிய அளவில் தற்போது விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், மன்மோகன்சிங் கலந்து கொள்ளும் முடிவில் இருந்து பின்வாங்கியிருப்பது கவனிக்கத்தக்கது.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்