தேசிய செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் சித்தாந்தம் மற்றும் கொள்கை, உண்மைகளுக்கு இடையே நடக்கும் யுத்தம் - சோனியாகாந்தி

எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் மீரா குமார் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தினத்தந்தி

புதுடெல்லி

எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் மீரா குமார் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் இந்த வேட்பு மனு தாக்கலை சித்தாந்தத்திற்கான போர் என்று வர்ணித்தன.

வேட்பு மனு தாக்கலின் போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட பலரும் பங்கேற்றனர். சீதாராம் யெச்சூரி, சரத் பவார் ஆகியோரும் இதில் பங்கேற்றனர். வேட்பு மனு தாக்கலில் 16 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

அப்போது பேசிய 72 வயதாகும் மீரா குமார், இன்றிலிருந்து சித்தாந்தத்திற்கான எங்களது போர் துவங்கிவிட்டது. அத்தகைய சித்தாந்தங்களாவன, சமுதாயத்தில் இணைவு, ஊட்க மற்றும் தனிநபர் சுதந்திரம், வறுமை ஒழிப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் சாதிப்படிநிலைகளின் தகர்ப்பு ஆகியவையே சித்தாதத்தில் அடங்கியுள்ளம. தான் சித்தாந்தத்தைப் பற்றி பேசிக் கொண்டிராமல் அதை நடைமுறைப்படுத்துவது பற்றி பேசுவேன். மேலும் கூறுகையில் சிலர் பேசுவது போல இது தலித்துகளுக்கு இடையிலான போர் அல்ல என்றும் சித்தாந்த ரீதியிலானதும் என்று கூறினார்.

சபர்மதி ஆஸ்ரமத்தில் தனது பிரச்சாரத்தை துவங்கவுள்ளதாக அவர் கூறினார். ஜூலை 15 அன்று பிரச்சாரத்தை முடிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், வேட்புமனு தாக்கல் நிகழ்வு முடிந்த பின்னர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,எங்களைப் பொறுத்தவரை இந்த தேர்தல் சித்தாந்தம் மற்றும் கொள்கை, உண்மைகளுக்கு இடையே நடக்கும் யுத்தம். இதில் நாங்கள் வென்றே தீருவோம். எனத் தெரிவித்தார்.


வெளிநாட்டில் தற்போது ஓய்வில் இருக்கும் அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி , மீராகுமாரை எங்களது வேட்பாளராக கொண்டதற்கு பெருமைப்படுகிறோம். பிரிவினைவாத சித்தாந்தங்களுக்கு எதிராக நின்று நாடு மற்றும் மக்களுக்கு அவர் எடுத்துக்காட்டாய் திகழ்வார் என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்