புதுடெல்லி,
மிசோரம் மாநிலத்தில் தேர்தல் நடைபெறும் போது, திரிபுராவில் உள்ள இவர்கள் மிசோரமில் உள்ள தங்கள் சொந்த தொகுதிகளில் வந்து வாக்களிப்பதற்கு கடந்த 2014-ம் ஆண்டு தேர்தல் கமிஷன் ஒப்புதல் அளித்தது.
இந்த நிலையில் மிசோரம் மாநில சட்டசபைக்கு வருகிற 28-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் திரிபுராவில் உள்ள புரு இன மக்கள் அங்கிருந்தவாறே வாக்களிப்பதற்கு மாநில தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த ஷாஷாங் அனுமதி அளித்தார். இதற்கு மிசோரமில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஷாஷாங்குக்கு எதிராக பல்வேறு சமூக அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டன.
இதைத்தொடர்ந்து மாநில அரசுடன் தலைமை தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்தியது. தொடர்ந்து மிசோரம் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த ஷாஷாங்கை மாற்றி நேற்று அறிவிப்பு வெளியிட்டது. மிசோரமின் புதிய தேர்தல் அதிகாரியாக ஆஷிஷ் குந்த்ரா நியமிக்கப்பட்டு உள்ளார்.