தேசிய செய்திகள்

மூணார்: சுற்றுலா வந்த வேன் கவிழ்ந்து விபத்து - 12 பேர் படுகாயம்

கேரள மாநிலம், மூணாறுக்கு சுற்றலா வந்த வேன் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

தினத்தந்தி

மூணாறு,

மதுரையில் இருந்து கேரள மாநிலம் மூணாறுக்கு சுற்றுலா செலவதற்காக மதுரையைச் சேர்ந்த மணிகண்டன்(வயது 48),அமுதா பழனிவேல்(63), ஷியாம் குமார்(50),, ரவிக்குமார் (43), மணிமேகலை(63), சௌமியன்(14), தனலட்சுமி(34), ஷர்மிளா(40), சீதாலட்சுமி(40), அண்ணாதுரை(48),விக்னேஷ்(22), கிருஷ்மி(18) ஆகியோர் மினி வேனில் வந்துள்ளனர்.

இவர்கள் வந்த வேன் அடிமாலி அடுத்துள்ள செங்குளம் அருகே வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தவறி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. ஆனாலும் இந்த விபத்தில் வேனிலிருந்த அனைவரும் படுகாயம் அடைந்தனர்.

உடனே அப்பகுதியில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு அடிமாலி பகுதியில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த வெள்ளதூவல் போலீசார் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை