தேசிய செய்திகள்

ரெயில் இருக்கையில் அமர்வதில் தகராறு; பயணியை தூக்கி வெளியே வீசிய கும்பல்

பீகாரில் இருக்கையில் அமர்வதில் ஏற்பட்ட தகராறில் எக்ஸ்பிரெஸ் ரெயிலில் இருந்து பயணி ஒருவர் தூக்கி வெளியே வீசப்பட்டார்.

பீகாரின் ஆனந்த் விகாரில் இருந்து முசாபர்நகர் நோக்கி சப்த்கிராந்தி எக்ஸ்பிரெஸ் ரெயில் இன்று சென்று கொண்டிருந்தது.

அந்த ரெயில் சம்பரான் மாவட்டத்தில் உள்ள வால்மீகிநகர் ரெயில் நிலையம் அருகே வந்தபொழுது இருக்கையில் அமர்வதில் பயணிகளுக்கும், கும்பல் ஒன்றிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், அந்த கும்பல் பயணிகளை அடித்து தாக்கியுள்ளது.

அவர்களை கட்டுக்குள் கொண்டு வர பயணி ஒருவர் சமரசத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமுற்ற அந்த கும்பல் பயணியை அடித்து ரெயிலில் இருந்து தூக்கி வெளியே வீசியுள்ளது. இந்த சம்பவத்தில் பயணி பலத்த காயமடைந்துள்ளார். அவர் யாரென்று அடையாளம் தெரியவில்லை. போலீசார் குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு