தேசிய செய்திகள்

நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழகத்தில் 78,693 மாணவர்கள் தேர்ச்சி

நீட் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த பிரபஞ்சன் முதலிடம் பிடித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்காக நாடு முழுவதும் கடந்த மே மாதம் 7-ந்தேதி நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இந்த தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த பிரபஞ்சன் முதலிடம் பிடித்துள்ளார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த போரா வருண் சக்கரவர்த்தி என்பவர் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். முதல் 10 இடங்களைப் பிடித்தவர்களில் 4 பேர் தமிழர்கள் ஆவர்.

நாடு முழுவதும் சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் நீட் தேர்வு எழுதினர். இதில் அதிக அளவில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலில் உத்தர பிரதேசம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து மராட்டிய மாநிலம் 2-வது இடத்திலும், ராஜஸ்தான் 3-வது இடத்திலும் உள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 1.44 லட்சம் பேரில் 78,693 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து