தேசிய செய்திகள்

நேதாஜி பிறந்தநாள் ‘துணிச்சல் தினம்’ ஆக கொண்டாடப்படும்; மத்திய அரசு அறிவிப்பு

நேதாஜி பிறந்தநாள் ‘துணிச்சல் தினம்’ ஆக கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 125-வது பிறந்தநாள், வருகிற 23-ந் தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அந்த நாளை துணிச்சல் தினமாக (பராக்கிரம் திவாஸ்) கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதை மத்திய மந்திரி பிரகலாத் சிங் ஜோஷி அறிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

23-ந் தேதி கொல்கத்தாவில் நடக்கும் முதலாவது துணிச்சல் தின விழாவில், பிரதமர் மோடி பங்கேற்கிறார். தேசிய நூலக மைதானத்தில் நேதாஜி தொடர்பான கண்காட்சியை திறந்து வைக்கிறார். நேதாஜி அமைத்த இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் மோடி கவுரவிக்கிறார்.

நேதாஜியின் 125-வது பிறந்தநாளை ஓராண்டு முழுவதும் கொண்டாடுவதற்கான திட்டங்களை வகுக்க பிரதமர் தலைமையில் 85 பேர் கொண்ட உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து