புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் சென்ட்ரல் விஸ்டா மறுவடிவமைப்பு திட்டத்தின் கீழ், மத்திய அரசின் துறைகளுக்காக புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. பிரதமர் அலுவலகம், பல்வேறு அமைச்சகங்கள் ஆகியவை புதிய கட்டிடங்களுக்குச் செல்ல உள்ளன. அங்குள்ள புதிய பிரதமர் அலுவலகத்துக்கு சேவா தீர்த் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சேவைகளை வழங்கும் புனித இடம் என்ற பொருள்படும்படி இந்த பெயர் வைக்கப்பட உள்ளது. குடிமக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் நிர்வாகம் என்பதை உணர்த்தும் வகையிலும், பிரதமர் அலுவலகம் என்பது அதிகார மையம் அல்ல, அது புனித சேவைக்கான மையம், அதாவது சேவை இல்லம் என்பதை உணர்த்தும் வகையிலும் இந்த பெயர் மாற்றத்துக்கு திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.