தேசிய செய்திகள்

ஜம்முவில் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு

ஜம்முவில் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது. இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியராணுவம் திறம்பட செயல்பட்டு வருகிறது. #Jammu

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அவ்வபோது இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்துகிறது. இதற்கு இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்றிரவு ஜம்முவிலுள்ள பூஞ்ச் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் எல்லைக்கோட்பாட்டை மீறி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியராணுவம் திறம்பட செயல்பட்டது. தொடர்ந்து இரு ராணுவமும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தாக்குதல் சம்பவம் குறித்து எந்தவித சேத விவரங்களும் இதுவரை வெளியாகவில்லை. கடந்த 14-ந் தேதி வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் 2 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இந்திய ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு