தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர்: பூஞ்ச் அருகே எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் பதிலடி

ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது.

பூஞ்ச்,

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இன்று அத்துமீறி தாக்குதல் நடத்தியது. சிறிய ரக குண்டுகள், தனியங்கி இயந்திரங்கள் மூலம் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது. இரு தரப்புக்கும் இடையே சண்டை நீடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று இதே பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது நினைவிருக்கலாம்.எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு 228 முறை எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. நிகழாண்டு அக்டோபர் 5 ஆம் தேதி வரை மட்டும், 503 முறை பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு