தேசிய செய்திகள்

நாடாளுமன்ற தொடரில் பொருளாதாரம் குறித்த விவாதங்களுக்கு முன்னுரிமை: பிரதமர் மோடி உறுதி

நாடாளுமன்ற தொடரில் பொருளாதாரம் குறித்த விவாதங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், 2020-ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இதுவாகும். மேலும் இந்த 10 ஆண்டுகளுக்கான முதல் கூட்டத்தொடரும் இதுதான். இந்த பத்தாண்டின் வளமான எதிர்காலத்துக்காக நாம் அனைவரும் பாடுபட வேண்டும். அதற்கான சிறப்பான அடித்தளத்தையும் அமைக்க வேண்டும். இந்த கூட்டத்தொடரில் பொருளாதார பிரச்சினைகளை விவாதிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். அந்த வகையில் இரு அவைகளிலும் இந்த பிரச்சினைகள் தொடர்பாக சிறப்பான விவாதங்கள் இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.

சுரண்டலை அனுபவித்து வரும் தலித், பெண்கள் போன்ற அடித்தட்டு மக்களுக்கு அதிகாரமளித்தலே தங்கள் அரசின் அடையாளமாகும் என கூறிய பிரதமர் மோடி, இந்த நடவடிக்கைகளை தொடர விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து