தேசிய செய்திகள்

ரபேல் போர் விமானம் விவகாரத்தில் பிரதமர் மீது குற்றச்சாட்டு

இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று பிரசாரத்தை தொடங்கினார்.

தினத்தந்தி

ஜெய்ப்பூர்,

ஜெய்ப்பூரில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர், பிரெஞ்சு போர் விமானமான ரபேல் ரக விமானங்கள் கொள்முதல் செய்ய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு செய்த ஒப்பந்தத்தைவிட மூன்று மடங்கு கூடுதல் விலைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் பிரதமரின் நண்பரும், வர்த்தகருமான அனில் அம்பானிக்கு கிடைக்க மோடி சாதகமாக செயல்பட்டுள்ளார். இதன்மூலம் பிரதமரின் ஊழல் வெளிப்படையாக தெரியவந்துள்ளது என்றார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை