தேசிய செய்திகள்

காஷ்மீரில் 2 நாட்களுக்கு பின் ரெயில் சேவை மீண்டும் செயல்பட தொடங்கியது

காஷ்மீரில் தீவிரவாதிகள் கொலைக்கு எதிரான பொது வேலை நிறுத்த அறிவிப்பினால் கடந்த 2 நாட்களாக ரத்து செய்யப்பட்ட ரெயில் சேவை மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.

தினத்தந்தி

காஷ்மீரில் ஜகூரா பகுதியில் கடந்த வெள்ளி கிழமை மாலை நடந்த என்கவுண்டரில் தீவிரவாதி ஒருவன் கொல்லப்பட்டான். துணை ஆய்வாளர் ஒருவரும் கொல்லப்பட்டார்.

இதனால் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பாதுகாப்பு காரணங்களுக்காக சனி கிழமை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து, காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் நேற்று முன்தினம் பாதுகாப்பு படை நடத்திய தேடுதல் வேட்டையில் லஷ்கர் இ தய்பா இயக்கத்தினை சேர்ந்த 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களில் 2008ம் ஆண்டு நடந்த மும்பை தீவிரவாத தாக்குதலில் பின்னணியாக செயல்பட்ட லக்வியின் மருமகன் மற்றும் முக்கிய தளபதிகளும் அடங்குவர்.

இந்த நிலையில், சுயமுடன் தீர்மானிப்பதற்கான உரிமை வேண்டும் என கூறி ஹுரியத் மாநாட்டு கட்சி மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் சுதந்திர முன்னணி ஆகிய பிரிவினைவாத அமைப்புகள் நேற்று பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தன.

இதனை தொடர்ந்து நேற்று 2வது நாளாக ரெயில் சேவை ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டது. அரசு நிர்வாகம் மற்றும் போலீசார் உத்தரவினை அடுத்து பாதுகாப்பு காரணங்களால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், கடந்த 2 நாட்களாக ரத்து செய்யப்பட்ட ரெயில் சேவை இன்று மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை