புதுடெல்லி,
மத்திய அரசு, வரியை உயர்த்தாவிட்டால், பெட்ரோலை லிட்டருக்கு 66 ரூபாய்க்கும், டீசலை 55 ரூபாய்க்கும் விற்க முடியும் என்று வெளியான பத்திரிகை செய்தியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வரி கொள்ளை என்ற தலைப்பில், அனைவருக்கும் அழிவு, விலைவாசி உயர்வின் வளர்ச்சி என்று அவர் கூறியுள்ளார்.