தேசிய செய்திகள்

திருமணத்தில் பங்கேற்று திரும்பியபோது சோகம்; முந்தி செல்ல முயன்ற 2 கார்கள் மரத்தில் மோதி 5 பேர் பலி

உத்தர பிரதேசத்தில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பியபோது 2 கார்கள் போட்டி போட்டு முந்த முயன்றபோது மரத்தில் மோதியதில் 5 பேர் பலியானார்கள்.

தினத்தந்தி

பண்டா,

உத்தர பிரதேசத்தின் சித்ரகூட் மாவட்டத்தில் ராஜாப்பூர் நகரில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு சிலர் கார்களில் திரும்பி கொண்டு இருந்தனர்.

இதில் பைலானி நகரின் நிவாயிச் கிராம மக்கள் வந்த 2 கார்கள் ஒன்றுடன் ஒன்று முந்தி செல்வதில் போட்டி ஏற்பட்டு உள்ளது. இதில், மிர்கானி கிராமம் அருகே வந்தபோது, முந்தி சென்றபோது ஏற்பட்ட விபத்தில் கார்கள் மரத்தின் மீது மோதியது.

இந்த சம்பவத்தில் அந்த இடத்திலேயே, 5 பேர் உயிரிழந்து உள்ளனர். அவர்கள் குல்தீப் சிங் (வயது 26), அபினவ் சிங் (வயது 21), பிரபாத் என்ற கல்லு (வயது 26), அதுல் (வயது 30) மற்றும் உமேஷ் பாபு (வயது 25) என அடையாளம் காணப்பட்டு உள்ளது.

6 பேர் காயம் அடைந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்