தேசிய செய்திகள்

முன்னாள் சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா மீது கண்டிப்பாக வழக்கு தொடரப்படும் - டிடிவி தினகரன்

முன்னாள் சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா மீது கண்டிப்பாக வழக்கு தொடரப்படும் என டிடிவி தினகரன் கூறிஉள்ளார்.

தினத்தந்தி

பெங்களூரு,

பெங்களூருவில் செய்தியாளார்களிடம் பேசிய டிடிவி தினகரனிடம் சிறையில் சசிகலாவிற்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கையில், இது பொய் என்று உங்களுக்கே தெரியும். எந்தஒரு சலுகையும் சிறையில் வழங்கப்படவில்லை. முன்னதாக அரை மணி நேரத்தில் சென்று சந்திப்போம், இப்போது ஒன்றரை மணி நேரம் ஆகிறது. இப்போது குற்றச்சாட்டு தொடர்பாக அதிகாரிகளுக்கும் நெருக்கடி அதிகமாக இருக்கலாம். பத்திரிக்கையாளர்களும் இங்கேயேதான் உள்ளீர்கள். சிறையில் மற்ற கைதிகளை போன்றே சசிகலா நடத்தப்படுகிறார். முன் இருந்த அறையிலே இருக்கிறார். 5 ஸ்டார் வசதி எல்லாம் கிடையாது.

முன்னாள் சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா மீது கண்டிப்பாக வழக்கு தொடரப்படும். அதுதொடர்பான நடவடிக்கையை கர்நாடக மாநில அதிமுக தலைவர் புகழேந்தி நடவடிக்கை எடுக்கிறார். நீதிமன்றமும், வழக்கும் பழக்கப்பட்ட விஷயம் என்பதால் பொறுத்திருந்து பாருங்கள். மற்ற கைதிகளுக்கு எப்படி உணவு வழங்கப்படுகிறதோ அதேபோல்தான் சசிகலாவுக்கும் உணவு வழங்கப்படுகிறது என கூறிஉள்ளார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை