புதுடெல்லி,
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநராக என்.என் வோரா பதவி வகித்து வந்தார். இந்த நிலையில், என்.என்.வோராவுக்கு பதிலாக பீகார் ஆளுநர் சத்யபால் மாலிக், ஜம்மு காஷ்மீரின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். பீகார் மாநில ஆளுநராக லால் ஜி டாண்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அரியானா மாநில ஆளுநராக சத்யதேவ் நாரயண் ஆர்யா நியமிக்கப்பட்டுள்ளார். உத்தரகாண்ட் மாநில ஆளுநராக பேபி ராணி மவுரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிக்கிம் மாநில ஆளுநராக கங்கா பிரசாத்தும், மேகாலாயா கவர்னராக ததகாட்ட ராய், திரிபுரா மாநில ஆளுநராக கப்டன் சிங் சோலங்கியை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.