தேசிய செய்திகள்

ஐ லவ் யூ என கூறினால் பாலியல் தொல்லை அல்ல - கோர்ட்டு தீர்ப்பு

ஒருவரிடம் தங்களை காதலிப்பதாகக் கூறுவது குற்றமல்ல, அது தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம்தான் என்றும் கருத்து தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

மும்பை

மும்பையில் 22 வயது வாலிபர் ஒருவர் 17 வயது சிறுமியிடம் பின் தொடர்ந்து சென்று 'ஐ லவ் யூ' என்று தன்னுடைய காதலை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் இளைஞர் மீது சிறுமியும் அவரது தாயாரும் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் இரு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான வழக்கு மும்பை சிறப்பு கோர்ட் நீதிபதி கல்பனா பாட்டீல் முன்பு விசாரணைக்கு வந்தது.

இதனை விசாரித்த நீதிபதிஒரு சந்தர்ப்பத்தில் ஒருவரிடம் மற்றொருவர் 'ஐ லவ் யூ' என்று கூறுவது தன்னுடைய உணர்வுகளை நாகரீகமான முறையில் வெளிப்படுத்துவது. உள்நோக்கத்துடனும், பாதிக்கப்பட்டவருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் தொடர்ந்து சென்று அவ்வாறு கூறுவது தான் சட்டப்படி குற்றம். குற்றம் சாட்டப்பட்டவர் உள்நோக்கத்துடனும், சிறுமியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், பாலியல் உள்நோக்கத்துடனும் இதனை செய்துள்ளார் என்பதை நிரூபிக்கவில்லை என்று கூறி குற்றம் சாட்டப்பட்ட இளைஞரை விடுவித்து உத்தரவிட்டார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை