தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு

உத்தரபிரதேசத்தில் 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு கடந்த 16-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன.

தினத்தந்தி

லக்னோ,

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை படிப்படியாக குறைந்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பரவல் குறைந்துள்ள பகுதிகளில், நோய்த்தடுப்பு விதிகளை பின்பற்றி பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 16-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. அதனை தொடர்ந்து மாநில அரசு சார்பில் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்கும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆகஸ்ட் 23 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை