தேசிய செய்திகள்

வரும் செப்டம்பர் முதல் ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசியை தயாரிக்கிறது சீரம் நிறுவனம்

இந்தியாவில் ஆண்டுக்கு 300 மில்லியன் ஸ்புட்னிக் வி தடுப்பூசி தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புனே,

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசிக்கு இந்தியாவில் அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வரும் செப்டம்பர் மாதம் முதல் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை

சீரம் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக ரஷ்யாவில் தடுப்பூசியை உருவாக்கிய ரஷ்யாவின் நேரடி முதலீடு நிதி நிறுவனம் கூறியிருக்கிறது.

இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "புனேவில் உள்ள இந்திய சீரம் மையத்தில் செப்டம்பர் மாதம் முதல் ஸ்புட்னிக் வி தடுப்பூசி தயாரிக்கப்பட உள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு 300 மில்லியன் தடுப்பூசி தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தடுப்பூசி தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை பகிரும் பணி ஏற்கனவே தொடங்கி விட்டது. இவற்றை கொண்டு தடுப்பூசி தயாரிப்பதற்கனா முதல் கட்டப்பணியில் சீரம் நிறுவனம் ஈடுபட்டுள்ளது" என கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை