தேசிய செய்திகள்

மகன், மருமகள், பேத்திகளை எரித்துக் கொன்ற கொடூர முதியவர் - திடுக்கிடும் தகவல்

இடுக்கி அருகே மகனை குடும்பத்துடன் தந்தை எரித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே உள்ள சீணிக்குழி பகுதியைப் சேர்ந்தவர் முகமது பைசல் (45 வயது). இவருடைய மனைவி ஷீபா (44). இந்த தம்பதிகளுக்கு மெஹ்ரா ( 19) அஸ்னா, (14) என்ற மகள்கள் உள்ளது.

முகமது பைசலின் தந்தை ஹமீது (79). கடந்த 3 வருடங்களாக தந்தை மகனுக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் நேற்று இரவு தந்தை மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த தந்தை ஹமீது மகனை குடும்பத்துடன் தீர்த்துக்கட்ட திட்டமிட்டு உள்ளார். இதற்காக மகன் முகமது பைசல் தனது குடும்பத்துடன் தூக்கிக் கொண்டிருந்த போது தந்தை ஹமீது வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டி உள்ளார். பின்னர் தான் வைத்திருந்த பெட்ரோலை வீட்டின் மீது ஊற்றி தீவைத்து கொளுத்தி உள்ளார்.

வீட்டுக்குள் இருந்த பைசல் குடும்பத்தினர் திடுக்கிட்டு எழுந்து தங்களை காப்பாற்ற கோரி அக்கம் பக்கத்தினரை கூப்பிட்டனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் பைசல் இவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர்.

இது குறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்குவந்து வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்து தீயில் கருகி உயிரிழந்த 4 பேரின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த தொடுபுழா போலீசார் பைசலின் தந்தை ஹமீதை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்

இது தொடர்பாக போலீசார் கூறுகையில்,

வீட்டுக்கு தீ வைப்பதற்கு முன்பாக அந்த பகுதிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் உள்ள தண்ணீரை ஹமீது திறந்து விட்டு உள்ளார். இதனால் அருகே உள்ளவர்களால் வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

இதனால் முகமது பைசல் தனது குடும்பத்துடன் தீயில் கருகி உயிரிழந்து உள்ளார். தற்போது பைசலின் தந்தை ஹமீதை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்து உள்ளனர் என்று தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை