புதுடெல்லி,
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் டெல்லியில் கடந்த 22 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியடைந்து உள்ளதால் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
இந்நிலையில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி சட்டப்பேரவையில் அம்மாநில அரசு தீர்மானம் கொண்டு வந்துள்ளது. மேலும் விவசாயிகளின் போராட்டத்திற்கு முழு ஆதரவு வழங்கப்படும் எனவும் டெல்லி மாநில அரசு உறுதியளித்துள்ளது.