திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்னையைச் சேர்ந்த பக்தரும், ஒரு தனியார் நிறுவன பிரதிநிதியுமான பி.பி.சம்பத் என்பவர் ரூ.6 லட்சம் மதிப்பிலான டிராக்டர் ஒன்றை காணிக்கையாக வழங்கினார். அந்த டிராக்டருக்கான ஆவணம், சாவி ஆகியவற்றை கோவில் துணை அதிகாரி ஹரேந்திரநாத் பெற்றுக்கொண்டார்.
முன்னதாக டிராக்டருக்கு கோவில் எதிரே அர்ச்சகர்கள் சிறப்பு பூஜைகளை செய்தனர்.