தேசிய செய்திகள்

இந்து மகாசபை சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம்; முன்னாள் மந்திரி ஈசுவரப்பா கலந்து கொண்டார்

சிவமொக்காவில் இந்து மகாசபை சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. இதில் முன்னாள் மந்திரி ஈசுவரப்பா கலந்து கொண்டு பூஜைகள் செய்தார்.

தினத்தந்தி

சிவமொக்கா;

இந்து மகாசபை சார்பில்...

சிவமொக்கா டவுன் கோட்டை பகுதியில் பீமேஸ்வரா கோவில் உள்ளது. இந்த கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த மாதம் (ஆகஸ்டு) 31-ந் தேதி இந்து மகாசபை சார்பில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு வந்தது. பூஜகள் செய்யப்பட்ட விநாயகர் சிலையை நேற்று டிராக்டரில் ஊர்வலமாக எடுத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுமார் 3 ஆயிரம் சிறப்பு மற்றும் அதிரடி படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், உயர்மட்ட கோபுரங்கள் அமைக்கப்பட்டும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருந்தது.

சிறப்பு பூஜைகள்

இந்த நிலையில் நேற்று காலையில் இந்து மகாசபை சார்பில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் முன்ளாள் மந்திரி ஈசுவரப்பா, மாநகராட்சி மேயர் சுனிதா அண்ணப்பா மற்றும் பா.ஜனதா, இந்து அமைப்பினர் பலர் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்டு முன்னாள் மந்திரி ஈசுவரப்பா, விநாயகர் சிலைக்கு பூஜைகள் செய்தார். பின்னர், முக்கிய வீதிகள் வழியாக விநாயகர் சிலை ஊர்வலகமாக எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை