கொல்கத்தா,
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி சாலையில் இறங்கி தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். தற்போது அவரது அரசில் மந்திரியாக இருக்கும் மாநில ஜாமியாத்-உல்மே-இ-ஹிந்த் என்ற அமைப்பின் தலைவர் சித்திக்குல்லா சவுத்திரி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை கொல்கத்தாவுக்குள் அனுமதிக்க மாட்டோம் என மிரட்டும் வகையில் கூறி உள்ளார்.
கொல்கத்தாவில் நேற்று நடந்த பேரணியில் அவர் பேசுகையில், மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறும் வரை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை கொல்கத்தா நகருக்குள் அனுமதிக்க மாட்டோம். அவர் வரும்போதெல்லாம் விமான நிலையத்தில் ஒரு லட்சம் தொண்டர்களை திரட்டி அவரை விமான நிலையத்தில் இருந்துவெளியேர விடாமல் தடுப்போம் என்று கூறினார்.