கோப்புப்படம்  
தேசிய செய்திகள்

மேற்கு வங்காளம் : உள்ளூர் ரெயில்களில் எல்இடி டிவிக்களை பொருத்த கிழக்கு ரெயில்வே முடிவு

உள்ளூர் ரயில்களில் எல்இடி டிவிக்களை பொருத்த கிழக்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.

தினத்தந்தி

ஹவுரா,

மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ளூர் ரயில்களில் எல்இடி டிவிக்களை பொருத்த கிழக்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது. எல்இடி டிவி பொருத்தப்பட்ட முதல் ரயில் ஹவுராவில் இன்று காலை 11.15 மணியளவில் புறப்பட்டது.

இந்த எல்இடி டிவிகளில் மக்களின் சோர்வை போக்கும் வகையில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படவுள்ளது. மேலும் ரெயில்வே பற்றிய முக்கிய தகவல்களும் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு ரெயில்வேயின் 50 உள்ளூர் ரயில்களில் 2 ஆயிரத்து 400 எல்சிடி டிவிக்கள் நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பை மற்றும் மைசூரில் ரெயில்களில் ஏற்கனவே டிவிக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கிழக்கு ரெயில்வே முதல் முறையாக இந்த திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை