தேசிய செய்திகள்

வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருடன் அமெரிக்க வெளியுறவு மந்திரி இன்று பேச்சுவார்த்தை

வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருடன் அமெரிக்க வெளியுறவு மந்திரி இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன், 2 நாள் பயணமாக நேற்று இரவு டெல்லிக்கு வந்து சேர்ந்தார். மந்திரி பதவி ஏற்ற பிறகு அவர் இந்தியா வருவது இதுவே முதல்முறை ஆகும்.

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருடன் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி இன்று அவர் பேச்சுவார்த்தை நடத்துகிறார். பிரதமர் மோடியையும் சந்திக்கிறார்.

ஆப்கானிஸ்தான் நிலவரம், குவாட் அமைப்பை வலுப்படுத்துதல், பாதுகாப்பு, வர்த்தக உறவை பலப்படுத்துதல் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது. கொரானா தடுப்பூசி உற்பத்திக்கான மூலப்பொருட்களை தொடர்ந்து வினியோகிக்குமாறு அமெரிக்காவை இந்தியா வற்புறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை