புதுடெல்லி,
மல்யுத்த வீரர் சாகர் ராணா தான்கட்டுக்கும், ஒலிம்பிக் போட்டியில் 2 முறை பதக்கம் வென்றுள்ள மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. கடந்த மே மாதம் 4-ம் தேதி சாகர் தன்கட் தரப்புக்கும், சுஷில் குமார் தரப்புக்கும் டெல்லியில் உள்ள சத்ராஸல் அரங்கில் திடீரென மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் சுஷில் குமாரும் அவரின் நண்பர்களும் தான்கட்டை கடுமையாகத் தாக்கிவிட்டுத் தப்பினர்.
மோசமான காயங்களுடன் கிடந்த சாகர் தான்கட்டை மற்றொரு நண்பர் சோனு மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தார். ஆனால், சிகிச்சைப் பலன் அளிக்காமல் சாகர் உயிரிழந்தார்.
இதையடுத்து, சாகர் தான்கெட் உயிரிழந்ததைக் கொலை வழக்காக மாற்றிய போலீசார் மல்யுத்த வீரர் சுஷில் குமாரை தேடி வந்தனர். தீவிர தேடுதலுக்கு பின்னர் கடந்த 23-ம் தேதி சுஷில் குமாரை டெல்லி போலீசார் கைது செய்தனர். கைது செய்து. சுஷில் குமார் டெல்லி சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், மல்யுத்த வீரர் சாகர் ராணா கொலை வழக்கு தொடர்பாக மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கு எதிராக டெல்லி காவல்த்துறை குற்றபத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில் சுஷில் குமாரை முக்கிய குற்றவாளி என தெரிவித்ததுடன் வழக்கு தொடர்பாக மேலும் 19 பேரையும் குற்றபத்திரிக்கையில் டெல்லி போலீசார் சேர்த்துள்ளனர்.