தேசிய செய்திகள்

‘ஏழை குடும்பத்திலிருந்து வந்ததால் என்னை காங்கிரசுக்கு பிடிவிக்கவில்லை’ பிரதமர் மோடி பரபரப்பு குற்றச்சாட்டு

ஏழை குடும்பத்திலிருந்து வந்ததால் காங்கிரசுக்கு என்னை பிடிக்கவில்லை என பிரதமர் மோடி பேசிஉள்ளார்.

ஆமதாபாத்,

குஜராத் மாநிலத்தில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி காங்கிரஸ் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

நான் டீதான் விற்றேன், ஆனால் நாட்டை விற்பனை செய்யவில்லை, என காங்கிரஸ் மீது கடும் தாக்குதலை தொடுத்து உள்ளார் பிரதமர் மோடி.

காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியின் மீது கடுமையான தாக்குதலை தொடுத்த பிரதமர் மோடி என்னுடைய ஏழ்மையான பின்னணியை கேலி செய்யாதீர்கள் என்றார்.

ராஜ்கோட்டில் பிரதமர் மோடி பேசுகையில், நான் ஏழ்மையான குடும்ப பின்னணியை கொண்டதால் காங்கிரசுக்கு என்னை பிடிக்கவில்லை. ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த ஒருவர் பிரதமர் ஆனதற்காக ஒரு கட்சி இப்படி கீழ்தரமாக நடந்துக் கொள்ள முடியுமா?. நான் டீதான் விற்றேன், ஆனால் நாட்டை விற்கவில்லை,என்றார். ஏழைகளையும், என்னுடைய ஏழ்மையான பின்னணியையும் காங்கிரஸ் கேலி செய்ய வேண்டாம் என கோரிக்கை விடுக்கிறேன் என்றார் பிரதமர் மோடி.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு