தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் வடபாகம் காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணிபுரிபவர் சுந்தரம். இவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் நேர்மையாக பணியாற்றி வரும் காவலர்களை பணியிடை மாற்றம் செய்து வருவதாக குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக 4 காவலர்களின் புகைப்படங்களையும் வெளியிட்ட அவர், நேர்மையாக பணியாற்றி வரும் இவர்களை பணியிட மாற்றம் செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார். இவரின் இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்த தகவல் மாவட்ட எஸ்.பி.யின் கவனத்திற்கு கெண்டு சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து உதவி ஆய்வாளரின் முகநூல் பக்கத்தில் இருந்த பதிவுகள் நீக்கப்பட்டது. மாவட்ட எஸ்.பி. கண்டித்ததன் பேரில் பதிவுகள் நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.