ஆட்டோமொபைல்

கவாஸகி ஸ்போர்ட்ஸ் பைக்

தினத்தந்தி

பிரீமியம் மோட்டார் சைக்கிள்களைத் தயாரிக்கும் கவாஸகி நிறுவனம் புதிதாக எம்.ஒய் 24 நின்ஜா இஸட்.எக்ஸ். 4 ஆர் என்ற பெயரிலான மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.8,49,000. இது 399 சி.சி. திறன் கொண்ட ஸ்போர்ட்ஸ் மாடல் மோட்டார் சைக்கிளாகும்.

இது லிக்விட்கூல்டு 4 ஸ்டிரோக் என்ஜினைக் கொண்டுள்ளது. 80 பி.எஸ். திறனை 14,500 ஆர்.பி.எம். சுழற்சியில் வெளிப்படுத்தக் கூடியது. 13 ஆயிரம் ஆர்.பி.எம். சுழற்சியில் 39 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும். முன்புறம் மற்றும் பின்புற ஷாக் அப்சார்பர்கள் அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலானது. 6 கியர்களுடன் ஸ்லிப்பர் கிளட்ச் வசதி, டிராக்ஷன் கண்ட்ரோல் வசதியோடு பல வித ஓட்டும் நிலைகளைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏ.பி.எஸ்., ஸ்மார்ட்போன் சார்ஜிங் (யு.எஸ்.பி.) வசதி உள்ளது.

இதில் உள்ள எலெக்ட்ரானிக் திராட்டல் வால்வு முறை வாகன செயல்பாட்டுக்கு ஏற்ற வகையிலான எரிபொருள் மற்றும் போதுமான காற்றை என்ஜினுக்கு அளிக்கக் கூடிய வடிவமைப்பைப் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை