தேடுபொறியில் பிரபலமான கூகுள் நிறுவனம் பல மின்னணு சாதனங்கள் மற்றும் ஸ்மார்ட்போன் களையும் தயாரிக்கிறது. இப்போது அதிக சக்திமிக்க வயர்லெஸ் சார்ஜரை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. பிக்ஸெல் ஸ்மார்ட்போன்களை விரைவாக சார்ஜ் செய்ய இது உதவும்.
இந்த சார்ஜரில் பிக்ஸெல் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய போடும்போது இது அதன் உரிமையாளரது அன்றாட அலுவல் பணி, வாகன நெரிசல் மற்றும் சமீபத்திய செய்தி விவரங்களையும் தரும். நெஸ்ட் ஹலோ அழைப்பு மணி உபயோகிப்பவர் வீடுகளில் கதவருகில் வந்திருப்பவர் விவரத்தை ஸ்மார்ட்போனிலேயே பார்க்க முடியும்.