சிறப்புக் கட்டுரைகள்

மனதை இலகுவாக்குங்கள்

நண்பர்கள், குடும்பத்தினருடன் மட்டுமின்றி சமூக தொடர்புகளையும் மேம்படுத்த வேண்டும். அது மனச்சோர்வு, கவலையில் இருந்து விடுபட வைக்கும்.

நெருங்கி பழகுபவர்களிடம் இருந்து விலக நேரிட்டாலோ, எதிர் பாராத பிரிவை எதிர்கொண்டாலோ மனம் வேதனைக்குள்ளாகி விடும். அப்போது மன அமைதி குலைந்துபோய்விடும். அதன் தாக்கம் நீண்ட காலம் நீடித்தால் மன ஆரோக்கியம் கேள்விக்குறியாகி விடும். மன அழுத்தமும் அதிகமாகிவிடும். அப்போது சிலர் தங்களுக்கு ஆறுதல் கூறுபவர்களிடம் கூட கோபம் கொள்வார்கள். உணர்ச்சிகளை கட்டுப்படுத்தமுடியாத அளவுக்கு கோபத்தை வெளிப்படுத்துவார்கள். அப்படிப்பட்டவர்களிடம் பகுத்தறிந்து சிந்திக்கும் திறன் இருக்காது. அவர்களின் செயல்பாடுகளையும் புரிந்துகொள்ள இயலாது. பொறுமையை கையாண்டால்தான் அவர்களை இயல்புக்கு கொண்டு வர முடியும்.

அதிக எரிச்சலும், விரக்தியும் மன அழுத்தத்திற்கான அறிகுறிகள்தான். அதனால் ஏற்கனவே மன வேதனையில் இருப்பவர்களிடம் மிக கவனமாக வார்த்தைகளை தேர்ந் தெடுத்து பேசவேண்டும். அன்பும், அக்கறையும், அரவணைப்பும் அவர்களின் மனநிலையை மாற்றிவிடும். சில நாட்களில் இயல்பான மன நிலைக்கு திரும்பிவிடுவார்கள். அவர்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்குகள், படைப்பாற்றல் திறன்களில் கவனம் செலுத்த வைக்கலாம். நண்பர்கள், குடும்பத்தினருடன் நெடுந்தூர பயணத்திற்கு அழைத்து செல்லலாம். அது அவர்களின் நடவடிக்கைகளில் மாற்றத்தை உருவாக்கும்.

நண்பர்கள், குடும்பத்தினருடன் மட்டுமின்றி சமூக தொடர்புகளையும் மேம்படுத்த வேண்டும். அது மனச்சோர்வு, கவலையில் இருந்து விடுபட வைக்கும். விருந்துகள், சமூக கூட்டங்கள் போன்றவற்றில் பங்கேற்கலாம். மனச்சோர்வில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு அன்றாட நடவடிக்கைகளில் மீண்டும் கவனம் செலுத்த வேண்டும். அது மன தடைகளை விலக்கும்.

மனம் சோர்ந்து போயிருக்கும்போது தனி நபர் சுகாதாரத்தை பேணுவது அவசிய மானது. இல்லாவிட்டால் மன நலமும், உடல் நலமும் வெகுவாக பாதிக்கப்படும். சோகம், கவலை, மன அழுத்தம் போன்றவை மனம் மற்றும் உடல் சார்ந்த செயல்பாடுகளை முடக்கிப்போட்டுவிடும். தனிமையை உணரும்போது மனதுக்கு பிடித்தமான விஷயங்களை செய்து பார்க்க முயற்சிக்கலாம். சமையலில் ஈடுபடுவதும் மனதை இலகுவாக்கும்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு