நெல்லை:
நெல்லை தாழையூத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை மற்றும் போலீசார் நெல்லை அருகே உள்ள அருகன்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் இருந்த 10 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். உடனே போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள் தாழையூத்து பகுதியை சேர்ந்த முத்துக்குமார் (வயது 42), பேச்சிமுத்து (38), முத்து (55), கோமுபாண்டியன் (30), சுப்பிரமணியன் என்ற மணி (41), நடராஜன் (58), பர்கிட் மாநகரம் பகுதியை சேர்ந்த முருகன் (58), கங்கை கொண்டான் பகுதியை சேர்ந்த துகந்தன் (32), சீவலப்பேரி பகுதியை சேர்ந்த மகாராஜன் (40), வண்ணார்பேட்டையை சேர்ந்த முருகன் (46) ஆகியோர் என்பதும், அவர்கள் பணம் வைத்து சூதாடியதும் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் முத்துக்குமார் உள்ளிட்ட 10 பேரையும் கைது செய்து, ரூ.5 ஆயிரத்து 760 மற்றும் 3 சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர்.