தமிழக செய்திகள்

தமிழகத்தில் மேலும் 2,269 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக ஏறுமுகத்தில் இருந்த கொரோனா தற்போது குறையத்தொடங்கியுள்ளது

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக ஏறுமுகத்தில் இருந்த கொரோனா தற்போது குறையத்தொடங்கியுள்ளது. கடந்த சில தினங்களாக தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவது மக்களுக்கு நிம்மதியை கொடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

தமிழகத்தில் மேலும் 2,269 - பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 35 லட்சத்து 08 ஆயிரத்து 526- ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2,697- ஆக உள்ளது.. இதுவரை 34 லட்சத்து 52 ஆயிரத்து 216 பேர் குணமடைந்துள்ளனர்.கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்பு இல்லை. தலைநகர் சென்னையில் 729- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்