தமிழக செய்திகள்

அறுந்து கிடந்த மின் கம்பியில் சிக்கி 3 பசு மாடுகள், 2 குரங்குகள் செத்தன

ராமநத்தம் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியில் சிக்கி 3 பசுமாடுகள், 2 குரங்குகள் செத்தன

தினத்தந்தி

ராமநத்தம்

மேய்ச்சலுக்காக சென்றன

ராமநத்தம் அருகே உள்ள கொரக்கை கிராமத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மனைவி ஈஸ்வரி(வயது 40), துரைசாமி மனைவி வள்ளி(50) மற்றும் கருப்பையா மனைவி அங்கம்மாள்(45) ஆகியோருக்கு சொந்தமான 3 பசு மாடுகள் நேற்று முன்தினம் அப்பகுதியில்டி மேய்ச்சலுக்கான சென்றன. ஆனால் மாலையில் வெகுநேரமாகியும் அவை வீடு திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த கருப்பையா மாடுகளை தேடி சென்றார்.

அப்போது வாகையூரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜமாணிக்கம் என்பருக்கு சொந்தமான வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த 3 பசுமாடுகளும் மின்சாரம் தாக்கி செத்து கிடந்தன. அதன் அருகில் சில நாட்களுக்கு முன்பு அதே மின்கம்பியில் சிக்கி இறந்த 2 குரங்குகளின் உடல்களும் அழுகிய நிலையில் கிடந்தன.

போலீசார் விசாரணை

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கருப்பையா ஊருக்குள் சென்று மின்சாரம் தாக்கி மாடுகள் இறந்து கிடந்ததை தெரிவித்தார். உடனே மாடுகளின் உரிமையாளர்கள் மற்றும் கிராமமக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று செத்து கிடந்த பசுமாடுகள் மற்றும் குரங்குகளை பார்த்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்த வந்த ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்