தமிழக செய்திகள்

தாய், மகன் உள்பட 5 பேர் படுகாயம்

மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் தாய், மகன் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

தினத்தந்தி

நாகை அருகே நாகூர் பகுதியை சேர்ந்தவர் பாபா பக்ருதீன். இவர் தனது தாயார் சென்னத்நிஷாவை மோட்டார் சைக்கிளில் ஏற்றி கொண்டு நேற்று முன்தினம் இரவு நாகையில் இருந்து நாகூருக்கு சென்று கொண்டிருந்தார். நாகை அரசு போக்குவரத்து கழகம் பணிமனை அருகே வந்தபோது எதிரே நாகூரில் இருந்து நாகையை நோக்கி ஒரு மோட்டார் சைக்கிளில் நஜிம்முகமது, சந்தோஷ், சதீஷ் ஆகிய 3 பேரும் வந்து கொண்டிருந்தனர். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்க நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் பாபா பக்ருதீன் மற்றும் அவரது தாயார் சென்னத்நிஷா, நஜிம்முகமது, சந்தோஷ், சதீஷ் ஆகியே 5 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தினர் 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் அங்கிருந்து பாபாபக்ருதீன் , சென்னத்நிஷா ஆகிய 2 பேரும் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்