தமிழக செய்திகள்

திமுக 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு ; மு.க ஸ்டாலின் அறிவிப்பு

பேராசிரியர் க.அன்பழகன் மறைவையொட்டி திமுக கொடிகள் அரக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளன.

தினத்தந்தி

சென்னை,

தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன். வயது முதிர்வு காரணமாக கடந்த ஒரு வருடமாக வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மோசம் அடைந்ததை தொடர்ந்து சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சிறப்பு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும், அவரது உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானர். க.அன்பழகனின் பூத உடல் கீழ்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

க.அன்பழகன் மறைவையொட்டி திமுக சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், அண்ணா அறிவாலயத்தில் திமுக கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது. கட்சி சார்பிலான நிகழ்ச்சிகள் அனைத்தும் 7 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாகவும் திமுக தலைமை அறிவித்துள்ளது.

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்